×

தமிழக அரசு சார்பில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை: டிச.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

2. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் - அதிகபட்சம் 5 நபர்கள் வரை) (I) 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் (அதிகபட்சம் 100 பேருக்கு மிகாமல் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட) அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் வென்றவர்கள்.  1.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை அதிகப்பட்சமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெறும் வீரர்/வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவற்றை இணையவழியில் sdat@tn.gov.in இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்தில் பதிவேற்ற வேண்டும். இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை இன்று (30ம் தேதி) முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

Tags : Tamil Nadu Government , Incentives for players who have won medals in state, national and international level competitions on behalf of Tamil Nadu Government: Must apply before 15th Dec.
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...