×

பரிசு தொகுப்புக்கு பதில் பொங்கலுக்கு ரூ.1000 வழங்க பரிசீலனை

சென்னை: பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 1000 ரூபாய் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் ரூ.1000 ரொக்கம் வழங்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா அல்லது ரேஷன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. ஏனென்றால் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் கொள்முதல் செய்ய தற்போது வரை டெண்டர் விடப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வழக்கமாக வழங்கப்படக்கூடிய பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Pongal , Consideration of Rs.1000 for Pongal in return for gift package
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா