×

 ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்  மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். பின்னர் பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: ஆளுநரிடம் 2 முக்கிய விஷயங்களை கோரிக்கையாக வைத்தோம். கடந்த ஜூலை 29ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பிரதமர் சென்னை வந்தார். அப்போது பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக அரசு தனது பணியில் இருந்து தவறியது. 180 நாடுகளைச் சார்ந்தவர்கள் அந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மாநில அரசின் பல மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை. பராமரிப்பு இல்லாத மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வந்து சென்ற பிறகு ஒன்றிய அரசு, பிரதமருக்கான பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு கடிதம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதன் பிறகு மாநில உளவுத்துறை பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை குற்றம் சாட்டி கடிதம் அனுப்பியிருந்தனர். பிரதமர் பாதுகாப்பில் தவறிழைத்தோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்களை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஆன்லைன் ரம்மி தொடர்பாக எங்களது கருத்தை ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இது தொடர்பாக மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு உள்ளார். பொத்தம் பொதுவாக ஆளுநர் கையெழுத்து போடவில்லை எனக் கூறுவது தவறு. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. செல்போனில் proxy server இருந்தால் மாநில அரசின் தடையையும் மீறி ஆன்லைன் சூதாட்டம் விளையாட முடியும். பிட்காயின் போன்றவற்றை பயன்படுத்த முடியும். துணை ராணுவ வீரரை மிரட்டும் செயலில் சில அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர். மாநில அரசு உடனடியாக துணை ராணுவ வீரர் குருமூர்த்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கியது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Governor ,R. N.N. Annamalai , Annamalai surprise meeting with Governor RN Ravi
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...