ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய, மாநில அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு ரூ.40 ஊதிய உயர்வு ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால், ரப்பர் கழகம் ஊதியம் தர மறுத்ததால் கடந்த 7ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுடன் அரசு சார்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள்  நிறைவேற்ற வேண்டும்.

Related Stories: