மேகாலயா அரசியலில் திருப்பம்; 3 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா: பாஜகவில் சேர முடிவு

ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவரும், எதிர்கட்சியை சேர்ந்த ஒருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) 2 எம்எல்ஏக்கள் பெனடிக்ட் மரக், எச்.எம்.ஷாங்ப்லியாங், எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பெர்லின் சங்மா ஆகியோர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்தனர். மேற்கண்ட 3 எம்எல்ஏக்களும் அடுத்த மாதம் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்எல்ஏ ஷாங்பிலியாங் கூறுகையில், ‘மேகாலயா மாநில வளர்ச்சிக்கு பிரதமர் மோடியால் மட்டுமே உதவி செய்ய முடியும். நாங்கள் 3 பேரும் பாஜகவில் சேருவதற்காக எங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளோம்’ என்றார். தற்போது என்பிபி கட்சியில் 21 எம்எல்ஏக்கள், யுடிபி-க்கு 8, பிடிஎப் 4, பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்கட்சி வரிசையில் திரிணாமுல் கட்சிக்கு 11 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரசுக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: