சிறை தண்டனை அனுபவித்து வரும் காங். மாஜி தலைவர் சித்து விரைவில் விடுதலை: நன்னடத்தை அடிப்படையில் பரிந்துரை

பாட்டியாலா: பாட்டியாலா சிறையில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்து, நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சிறையில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, ஒரு வழக்கு தொடர்பாக ஓராண்டு சிறை தண்டனையை அனுப்பவித்து வருகிறார். கிட்டதட்ட ஆறரை மாதங்கள் சிறை தண்டனையை முடித்துள்ள சித்து, விரைவில் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் குடியரசு தினத்தன்று (ஜன. 26) கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து சித்து விடுவிக்கப்படலாம் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘முன்னாள் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து, இதுவரை ஆறரை மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். சிறை விதிகளின்படி, நன்னடத்தை அடிப்படையில் சித்துவை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு சாதகமாக உள்ளன.

சிறை நிர்வாகம் மாநில அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், சித்துவை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனால் அவர் குடியரசு தினத்தன்று சிறையில் இருந்து விடுவிக்க வாய்ப்புள்ளது’ என்றன.

Related Stories: