4 சிறுவர்களிடம் இருந்து காப்பாற்றிய பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: போக்சோ, எஸ்சி-எஸ்டி சட்டத்தில் கைது

கைமூர்: பீகாரில் பலாத்காரம் செய்ய முயன்ற 4 சிறுவர்களிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய தலைமையாசிரியர் ஒருவர், அவரே அந்த சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தின் மலைப் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த சிறுமியை நான்கு சிறுவர்கள் சுற்றிவளைத்தனர். அவர்கள் சிறுமியை அங்கிருந்து மற்றொரு மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

அவர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தனர். அந்த நேரத்தில் சிறுமி கூக்குரலிட்டார். சிறுமியின் குரல் கேட்டு கிராம பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு வந்தார். தலைமையாசிரியரை பார்த்ததும், 4 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் தலைமை ஆசிரியர், சிறுமியை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றார். சிறுமியை காப்பாற்றிய தலைமையாசிரியரின் கொடூர புத்தியால், அவரே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். பின்னர் அந்த சிறுமியை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து அப்படியே ஓடிவிட்டார். மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் கைமூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள நான்கு சிறுவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் மீது 376 டிஏ, போக்சோ சட்டம், எஸ்சி-எஸ்டி சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு சிறுவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Related Stories: