×

சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1ம் தேதி முதல் அறிமுகம்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை: சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ, எஸ் வங்கி, இடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது.

விரைவில் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1ஆம் தேதியும், ஆமதாபாத், குவாஹத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Reserve Bank of India , Digital rupee for retail transactions to be launched from December 1: RBI announcement
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...