×

கார் வெடிப்பு சம்பவம் குறித்து அவதூறு யூடியூபர் கிஷோர் கே.சாமி கைது

கோவை:  கார் வெடிப்பு சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்தவர் யூடியூபர் கிஷோர் கே.சாமி. இவர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிந்ததாக கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது.

இது தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதை அறிந்த கோவை போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று அவரை கார் வெடிப்பு தொடர்பாக நேற்று கைது செய்தனர். பின்னர் கோவை 4வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து வருகிற 12ம் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். மேலும் மாநகர சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரம் அவரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து கிஷோர் கே.சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.


Tags : Kishore K. Samy , Car, explosion incident, defamation, YouTuber Kishore, K. Samy, arrested
× RELATED முதல்வர் குறித்து டிவிட்டரில் அவதூறு...