×

நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 1983 முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்குகளை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருந்தால் ஊழலை கட்டுப்படுத்த முடியாது என்றும், நீண்டநாள் நிலுவை என்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவை இல்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Madras High Court , pending, corruption, case, complete, Madras, High Court, order
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...