தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தகவல்

திருவண்ணாமலை: கார்த்திகை தீப  திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம்   சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 05/12/2022 மற்றும் 06/12/2022 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தகவல். சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in , மற்றும் tnstc official app,  ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்கலாம்

Related Stories: