×

ராகிங்கில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்: ஐகோர்ட்டில் வேலூர் சி.எம்.சி. விளக்கம்

சென்னை: ராகிங்கில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி. விளக்கம் அளித்துள்ளது. ராகிங் தொடர்பாக ஏற்கனவே 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவர்கள் கண்டறியப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ராகிங்கை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சி.எம்.சி. கல்லூரி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எம்.சி. கல்லூரியின் அறிக்கையை ஏற்று தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.


Tags : Vellore CMC , Ragging, students suspended, Icourt, Vellore C.M.C.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்