×

தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முன்னோடி என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருதுநராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர்; தாய் மொழியில் படித்தால்தான் அறிவை வளர்க்க முடியும். புத்தக அறிவு மட்டும் மாணவர்களுக்கு போதாது. திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். கற்பிக்கும் முறை தற்போது மாறி வருகிறது.

பழைய கற்பிக்கும் முறை போதுமானது இல்லை. மாணவர்கள் என்பவர்கள் ஆலமர விதை போன்றவர்கள். அதை கண்டறிந்து பெரிய மரமாக வளர ஆசிரியர்கள் உதவிட வேண்டும். திருக்குறளை அனைத்து மாநிலங்களில் பாடத்திட்டமாக மாற்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன். உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முன்னோடி. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளது எனவும் கூறினார்.


Tags : Chief Ministers ,North Eastern ,Governor ,R.N. Ravi , I have spoken to the Chief Ministers of North Eastern states to make Tamil an optional subject: Governor R.N. Ravi speech
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...