×

அம்மா உணவகம் எப்போதும் போல் செயல்படும்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது.  துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழியை மேயர் பிரியா வாசித்தார். தொடர்ந்து மேயர் பிரியா, கடந்த மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் அரசு துறையினருக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார். அதன்பிறகு 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து நேரமில்லா நேரத்தில் நிலை குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் பேசியதாவது: முதல்வரின் சீரிய முயற்சி மற்றும் மேயர், ஆணையாளர், கவுன்சிலர்களின் பணியால் மழை காலத்தில் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்கவில்லை. கடந்த 31.3.21 வரை குத்தகை கேட்பு தொகை (லீஸ்) ரூ.419 கோடி. ஆனால் வசூலான தொகை ரூ.2.69 கோடி மட்டுமே. நிலுவைத் தொகை ரூ.416 கோடி உள்ளது. கல்வி பயன்பாட்டிற்காக தனியார் பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு குத்தகையில் மாநகராட்சிக்கு வர வேண்டிய நிலுவை தொகை ரூ.248 கோடி.

அசோக் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளி குத்தகை தொகை ரூ.69 லட்சம் இதுவரை செலுத்தாமல் வைத்துள்ளது. இதுபோல் 9 கல்வி நிறுவனங்கள் குத்தகை தொகை செலுத்தாமல் உள்ளன. மற்ற இடங்களில் வணிக பயன்பாட்டிற்காக 201 நிலங்களில் ரூ.92 கோடி வணிக பயன்பாட்டிற்காக 75 நிலங்களில் ரூ.45 கோடியும், குடியிருப்புக்காக வழங்கப்பட்ட 136 தினங்களில் 8 கோடியும் பாக்கியுள்ளது. வழக்குகளை எல்லாம் விரைந்து நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  வசூல் மற்றும் நிலுவை தொகை விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யவும் இல்லை.

இதனால் பல நிலங்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அதன் விவரங்களை பதிவேற்றம் செய்து ஆக்கிரமித்தவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலளித்து கமிஷனர் ககன்தீப் சிங்பேடி பேசுகையில், பலர் நிலுவை தொகையை கட்டாமல் வைத்துள்ளனர். பலர் நீதிமன்றம் சென்று விட்டனர். 2018ம் ஆண்டு முதல் குத்தகைக்கு நிலங்களை விடுவதற்கு, வணிக பயன்பாட்டிற்கு 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வணிகம் அல்லாத பகுதிகளுக்கு குத்தகை 7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு தொகை செலுத்த முடியாது என்ற நீதிமன்றத்திற்கு சென்று சென்றுள்ளனர். திரு.வி.க. நகரில் உள்ள ஒரு பள்ளி குத்தகைக்கு நிலத்தை கேட்டது. ஆனால், ரூ.200 கோடி குத்தகை தொகை வருகிறது. எனவே, இதுபோன்ற குத்தகை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு கொள்கையை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைந்துள்ளது’ என்றார். நிலைக்குழு தலைவர் தனசேகர் பேசுகையில், ‘அதிமுக  ஆட்சியில் 9 ஆண்டுகளாக அம்மா உணவகத்தால் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி உள்ளது.

இது மாநகராட்சிக்கு பெரிய இழப்பாகும். இதை  சரி செய்யும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், அம்மா உணவகம் இப்போது எப்படி செயல்படுகிறதோ? அதே  போல் எப்போதும் செயல்படும். மிகவும் வருமானம் குறைவாக உள்ள அம்மா உணவங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகங்களுக்கு ஊழியர்கள்  தேவைப்பட்டால் கவுன்சிலர்களே தேர்வு செய்து கொள்ளலாம்’ என்றார்.

மெரினாவில் இலவச வைபை வசதி
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் இலவச வைபை வசதி அளிக்க தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

Tags : Mayor Bria , Amma restaurant will be open as usual: Mayor Priya announced at the Corporation meeting
× RELATED நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற...