தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சிவபிரசாத் பொறுப்பேற்று கொண்டார். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன், புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய கட்டுமான பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஆந்திர மாநிலம் கடப்பா விமான நிலையத்தில் இயக்குநராக பணியாற்றி வந்த சிவபிரசாத், பணியிட மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் போதுமேலாளர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள சிவபிரசாத் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1997ல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். 2001 முதல் ஆந்திராவின் அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம், திருச்சி மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் விமான நிலைய இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: