×

தல டோனிபோல் சிறப்பாக செயல்படுவார்; டி20 கேப்டனாக `பலே’ பாண்டியாதான் தகுதியானவர்: அஸ்வின் ஆரூடம்

சென்னை: கோஹ்லிக்கு பின்னர் ரோகித் சர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் சொதப்பியது. அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தோல்விகள் காரணமாக ரோகித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவுக்குத்தான், டி20 அணி கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். அதில், ‘‘உண்மையில், ஹர்திக் பாண்டியா தோனிக்கு நெருக்கமானவர் என்பது நம்ம எல்லோருக்கும் தெரியும். டோனியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளதாக ஹர்திக் பாண்டியா பலமுறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, டோனியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அவர் போட்டியின்போது செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார். பிரச்சினைகளை மிகவும் நேர்த்தியாக கையாள்கிறார்.

இதுபோல் சாம்சன் விஷயத்தில்கூட ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா மிகச்சிறப்பான பதிலை அளித்திருந்தார். கலவையான அணியை வைத்து விளையாட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால்தான் சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் உள்ள அனைவருக்கும் சரியான வாய்ப்பினை வழங்க சரியான முயற்சி செய்வோம் என ஹர்திக் கூறியிருந்தார். மேலும், டோனியைப் போலவே கேப்டனாக எனது அறை எப்போது வேண்டுமானாலும் திறந்திருக்கும் என்றும் பாண்டியா கூறியிருந்தார். இப்படி டோனிக்கும், பாண்டியாவுக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போவதால், இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவால் சிறப்பாக செயல்பட முடியும்” என்று அஸ்வின் தெரிவித்தார்.

Tags : Thala Donipol ,Bale ,Pandya ,T20 ,Ashwin Arudam , Thala Donipol will do well; 'Bale' Pandya deserves T20 captaincy: Ashwin Arudam
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு