கிருஷ்ணகிரி அருகே கம்பன் கழக விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட கம்பன் கழகம் சார்பில், 7ம் ஆண்டு கம்பன் விழா நடந்தது. விழாவிற்கு நில எடுப்பு துணை ஆணையாளர் சக்திவேல், கம்பன் கழக நிறுவனத் தலைவர் ரவீந்தர் ஆகியோர் தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்ரீரங்கன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக டாக்டர் செல்லக்குமார் எம்.பி., கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனர் திருமால்முருகன், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இணை செயலாளர் சிவராஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கம்பன் குறித்து கம்பன் கழக இணை செயலாளர் தமிழ் திருமால், என்னைக் கவர்ந்த நாயகன் ராவணன் என்ற தலைப்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் பேசினர். நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனபால், உதயநிலவு, அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: