உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ந.பரிமளம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர்கள் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, வேதாச்சலம், ரவி, பொருளாளர் ராகவ ரெட்டிமேடு ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், சுற்றுச்சூழல் அமைப்பாளர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன் மெய்யழகன், அமலாசரவணன், கௌரி ஹரிதாஸ், பேருர் சி.கருணாகரன், துணை செயலாளர் ரவி, சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், நிர்வாகிகள் சங்கர், ஜெயராமன், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி இஅ. இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு நத்தம், ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, சிந்தலகுப்பம் மற்றும் எளாவூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார். விழாவில், ஊராட்சி தலைவர் அமிர்தம், சாம்பசிவம், அறிவழகன், ரமேஷ், மீசை ராஜா உள்பட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: