சிறையில் சொகுசு வாழ்க்கை வீடியோ: நீதிமன்ற அவமதிப்பு மனுவை திரும்ப பெற்ற அமைச்சர்

புதுடெல்லி: சிறையில் மசாஜ் செய்யப்பட்ட வீடியோ வெளியீடு தொடர்பான அமலாக்கத்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்கை டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திரும்ப பெற்றார். ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ, மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின.

இந்த வழக்கில் பிரமாண பத்திரம், வீடியோக்கள் எதையும் வெளியிடக்கூடாது என்று அமலாக்கத்துறையினருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதையும் மீறி அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் திடீரென தனது நீதிமன்ற அவமதிப்பு  மனுவை திரும்ப பெற்றார். அதில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உரிய நீதிமன்றத்தில் அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு மனுவை திரும்பப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: