×

அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்தது. தடையை நீட்டித்து வழக்கு விசாரணையை நவம்பர் 30-க்கு உச்சநிதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பன்னீர்செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் என்பது சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலை என்னவாக இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும்.

 கட்சிக்கான பொதுக்குழு தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடையானது நீட்டிக்கபட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,AIADMK General Assembly elections , Supreme Court extends ban on AIADMK General Assembly elections
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...