×

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை நாளை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் தர நாளை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.206.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 117 ஏக்கர் நிலம், 3 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக  புகாரை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் வரிபாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடைப்படியில் ரூ.206.42 கோடி வருமானவரித்துறை புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும் 3 வங்கிக்கணக்குகளை முடக்கியும் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீத்கிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் எம்.எல்.ஏ-விற்க்கான சம்பளமும்,  அரசு நிதி பெறுகின்ற கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி  அனிதா சுமந்த் மனுவுக்கு நாளை மறுநாளுக்குள் பதில் அளிக்கும்படி வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Tags : Income Tax Department ,former ,Minister ,Vijayabaskar , Court orders Income Tax Department to explain tomorrow in former Minister Vijayabaskar's case
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...