×

மதமாற்றங்களை தடை செய்வது குறித்த சட்டம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: அரசியல் அமைப்பு சட்டம் வழங்கும் வழிப்பாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது அல்லது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மோசடியான முறையில் மதமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இத்தகைய மோசடி மதமாற்றங்களை தடை செய்வது குறித்த சட்டம் முன் வடிவை ஏற்படுத்த சட்ட ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்பாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டம் வழங்கும் வழிபாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது அல்ல என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மோசடி, வஞ்சகம், வற்புறுத்தல், ஆசை வார்த்தை கூறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதமாற்றம் செய்வது வழிப்பாட்டு உரிமை ஆகாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒடிசா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஏற்கனவே மதமாற்ற தடைச்சட்டம் அமலில் இருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.அர்ஷா இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்று தெரிவித்ததோடு மாநில அரசுகளின் கருத்துகளையும் இணைத்து விரிவாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார். வழக்கு டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Supreme Court ,Union Govt , Law on Prohibition of Religious Conversions: Supreme Court orders action to Union Govt
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...