பள்ளி கல்வித்துறை அறிவிப்பு; அரையாண்டு தேர்வுகள் 15ம் தேதி முதல் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள், மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கும்.

6,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு முற்பகலிலும், 7,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வுகளுக்கான அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

Related Stories: