பிறந்தநாளன்று என்னை வாழ்த்திய முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி: உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: பிறந்தநாளன்று என்னை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிறந்தநாளன்று என்னை வாழ்த்திய, முதல்வர்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக இளைஞர் அணியினர் உள்ளிட்ட திமுகவினர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை-மீடியாவினர் அனைவருக்கும் அன்பும் நன்றியும். பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவோருக்கு சிறப்பு நன்றி.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: