உச்ச நீதிமன்றம் உத்தரவு; வீரப்பன் கூட்டாளிக்கு ஜாமீன்

சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளியான ஞானபிரகாசம் கொலை, கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெங்களூரு விசாரணை நீதிமன்றம், ஞானபிரகாசத்துக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2004ல் தீர்ப்பளித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் கடந்த 2013ல் நிராகரிக்கப்பட்டது.  இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 2014ல் தீர்ப்பளித்தது.

 

இந்நிலையில் தற்போது  ஞானபிரகாசம்  நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே விடுதலை செய்ய வேண்டும் என ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக 4 வாரத்தில் கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், குற்றவாளி ஞானபிரகாசத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: