×

ரூ.1 கோடி கடன், உயிரை பறித்தது பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(62). மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பயிற்சி மருத்துவராக பணியாற்றினார். மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்காக நாராயணசாமி ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் வேதனையடைந்த சுமித்ரா தற்கொலை செய்யப்போவதாக மகளிடம் கூறியபோது அவரும் சம்மதித்தார். இதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன் மதுமிதா பூச்சிக்கொல்லி மருந்தையும், தாய் சுமித்ரா அதிகளவு சர்க்கரை நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளனர். தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மதுமிதா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சுமித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.


Tags : Debt of Rs.1 Crore, Female Practitioner's Suicide Killed Her Life; Intensive care for the mother
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...