புதுடெல்லி: டெல்லி மண்டோலி சிறையில் சுகேஷ் சந்திரசேகர் சித்ரவதை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், ஒன்றிய மற்றும் டெல்லி அரசுகள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம், தொழிலதிபர்களை போனில் மிரட்டி ரூ.200 கோடி பறித்த ஆகிய வழக்குகளில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷ், டெல்லி சிறைத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தன்னிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டியதாக குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, மண்டோலி சிறையிலும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும், வேறு சிறைக்கு மாற்றக் கோரியும் மீண்டும் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.