புதுடெல்லி: ஒருவர் மற்றொருவரை கட்டாய மதமாற்றம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ‘கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்’ என்று கூறி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் முக்கியமான பிரச்னையாகும். அது நாட்டில் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை பாதிப்படைய செய்கிறது. அதனால் கட்டாய மதமாற்றம் என்பது தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசின் உறுதியான நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள நீதிமன்றம் விரும்புகிறது என தெரிவித்த நீதிமன்றம், கட்டாய மதமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என கடந்த 14ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.