முதுகு தண்டுவடம், இதய ரத்த ஓட்டம் பாதித்த 81 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை: ரேலா மருத்துவமனையில் நடந்தது

தாம்பரம்: முதுகு தண்டுவடம், இதய ரத்த ஓட்டம் பாதித்த 81 வயது மூதாட்டிக்கு ரேலா மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த 81 வயதான மூதாட்டிக்கு இதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தத்தை அனுப்பும் திறனானது 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில் அவர் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் கடுமையான ஒருவிதமான முதுகு தண்டுவட சுருக்கத்தால் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலும்பியல் பிரிவு மூத்த ஆலோசகரும், முதுகெலும்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவருமான டாக்டர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் தலைமையில் டாக்டர்கள் குழு சுமார் 2 மணி நேரம் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையை செய்தனர். பிறகு அவரை யாருடைய உதவியும் இன்றி நடக்க வைத்தனர்.

Related Stories: