வனத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை: வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள உத்தரவு: கட்டாய காத்திருப்பில் இருந்த வனத்துறை துணை பாதுகாவலர் ரிட்டோ சிரியா, வனத்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று தலைமைச் செயலகத்தில் உள்ள காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார். வன்துறை அதிகாரி மற்றும் தமிழ்நாடு வன அகாடமியின் இயக்குநராக உள்ள பத்மாவதி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு அதிகாரி மற்றும் கள இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கூடுதல் செயலாளராக உள்ள அர்ச்சனா கல்யாணி, சென்னையில் உள்ள பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை மாற்றும் வனத்துறை சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ராஜ்குமார், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் வன பாதுகாப்பு கள அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: