×

டிச. 1ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு; குஜராத்தில் நாளை பிரசாரம் ஓய்கிறது.! மோடி, அமித் ஷா, கார்கே பேரணியில் பங்கேற்பு

அகமதாபாத்: குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்வதால், மோடி, அமித் ஷா, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றி  பெற்று 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக டிச. 1ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

மேற்கண்ட 89 தொகுதிகளிலும் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவற்றின் வேட்பாளர்கள், சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 788 பேர் களத்தில் உள்ளனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 88 இடங்களில் போட்டியிட்டுள்ளன. முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள அஞ்சார், கோர்தன்பூர், பாலிதானா, கோர்தன்பர், ராஜ்கோட் ஆகிய இடங்கில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரலு, சாவ்லி, பிலோடா, நாரன்புரா ஆகிய நான்கு இடங்களிலும் பிரசாரம் செய்கிறார்.

அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, புருசோத்தம் ரூபாலா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரம் செய்கின்றன். நாளை மாலையுடன் முதற்கட்ட வாக்குபதிவு நடக்கும் பகுதியில் பிரசாரம் ஓய்வதால், தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் 89 ெதாகுதிகளிலும் வாக்குபதிவை அமைதியாக நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Tags : Gujarat ,Modi ,Amit Shah ,Karke , Dec. Early voting on 1st; Campaigning will stop tomorrow in Gujarat! Modi, Amit Shah, Kharge participate in rally
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...