×

கோபி சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையால் நிரம்பிய அணைகள்: அந்தியூர் அருகே 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு : கோபி சுற்றுவட்டாரத்தில் தொடரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி நீர்கள் வெளியேறுவதால் சத்தி - அந்தியூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கள்ளிப்பட்டி அருகே தொடர்ந்து பெய்த மழையால் கொண்டையம்பாளையம் என்ற இடத்தில் தரப்பாலத்திற்கு மேல் சுமார் 3 அடி நீளத்திற்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து சத்தி - அந்தியூர் சாலையில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைநீர் வினாடிக்கு 700 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வாணிபுத்தூர், வினோபா உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  


Tags : Gobi ,Andiur , Gobi, Rain, Dam, Antiyur, Flood, Danger, Warning
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது