குமரி அருகே பள்ளி பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 2 பள்ளி குழந்தைகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் காயம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் சுவாமியார் மடம் அருகே பள்ளி பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 2 பள்ளி குழந்தைகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். வேர்க்களம்பூ பகுதியில் இயங்கி வரும் டிரினிட்டி சி.பி.எஸ்.இ பள்ளி பேருந்து இன்று காலை சுவாமியார் மடம் பகுதியில் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்றுள்ளது. பேருந்தில் சாரதா என்ற பாதுகாவலரும், 2 பள்ளி குழந்தைகளும் இருந்து உள்ளனர்.

இந்த பேருந்து சுவாமியார் மடம் அருகே உள்ள பட்டணம் கால்வாய் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது. சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் கால்வாயில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கி இருந்த 2 பள்ளி குழந்தைகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரை மீட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பள்ளி குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: