2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல், பாஜக தனித்து போட்டியிட தயாரா?: சீமான் கேள்வி

சேலம்: தமிழகத்தில் கூட்டணியின்றி பாஜக போட்டியிடுமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில் எதுவும் சரியாக நடக்கவில்லை; எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர். 2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல், பாஜக தனித்து போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பினார். 7 பேர் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தால், அதற்கு மேல் நாங்கள் செல்வோம் எனவும் சீமான் தெரிவித்தார்.

ஆளுநரே வேண்டாம் என்பதே தங்களின் நிலைப்பாடு:

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை நீடிப்பதால்தான் ஆளுநரே நமக்கு தேவையில்லை என்கிறோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம். அண்ணா சொன்னது போல நமக்கு ஆளுநரே வேண்டாம் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என்று சீமான் கூறினார். முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2017ல் சேலம் பொதுக்கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சீமானுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஆஜரானார். 

Related Stories: