ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தமிழக கலால் துறை முதன்மை செயலாளர் சுவாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தமிழக கலால் துறை முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தமிழக கலால் துறை முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் குடும்பத்தாரோடு நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார் அவருக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு சாமி அம்மையார் தீர்த்த பிரசாதங்களை கோயில் சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories: