குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையில் தூய்மை பணி-தேசிய மாணவர் படையினர் பங்கேற்பு

குமாரபாளையம் : குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையில் திரண்ட தேசிய மாணவர் படையினர் அங்கு கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக குமாரபாளையம் ஆற்றங்கரையில் குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. கரையோரமுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகளில் பிளாஸ்டிக் காகிதங்கள், தெர்மாகோல் கழிவுகள், கிழந்த துணிகள் சிக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது.

கரையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சுத்தப்படுத்தும் பணியில் தேசிய மாணவர் படையின் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ஈடுபட்டனர்.

கரையோரங்களில் கிடந்த பிளாஷ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், கிழிந்த துணிகள் உள்ளிட்டவற்றை அகற்றினர். பின்னர், மக்கும் தன்மையில்லாத கழிவுகளை தரம்பிரித்து நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அலுவலர்கள் கேப்டன் நளினி, அந்தோணிசாமி, சத்யகுமார், ஹவில்தார் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: