மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள்-சுற்றுலா பயணிகள் ரசிப்பு

மஞ்சூர் :  மஞ்சூர் சாலையோரங்களில் பூத்துள்ள காட்டு டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஏற்கனவே ரெட்லீப், பாட்டில்பிரஷ், காட்டு சூரியகாந்தி உள்ளிட்ட பலவகையிலான வண்ண மலர்கள் பூத்துள்ளது. இந்நிலையில் தற்போது வெள்ளை மற்றும் வெளிர் ஊதா நிறங்களில் காட்டு டேலியா மலர்கள் ஏராளமாக பூத்து குலுங்குகின்றன.

 ‘டேலியா ஆஸ்திரியஸ்’ என்ற தாவர வகையை சேர்ந்த இம்மலர்கள் ஆண்டுக்கொருமுறை பூக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.மஞ்சூர் ஊட்டி சாலை மற்றும் மஞ்சூர் எடக்காடு சாலையோரங்களில் உள்ள செடிகளில் கொத்து, கொத்தாக பூத்துள்ள இம்மலர்கள் மஞ்சூர் சுற்றுப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது. பெரும்பாலான பயணிகளும் கண்களை கவரும் காட்டு டேலியா மலர்களின் அருகில் நின்று செல்பி எடுப்பதிலும் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories: