×

பார்வையாளர்கள் உடன் சிறைவாசிகள் இன்டர்காமில் பேச வசதி: மதுரை மத்திய சிறையில் தொடக்கம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை நேர்காணல் அறை நவீனமய படுத்தப்பட்டது. மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இண்டர்காம் மூலம் உரையாடும் வசதி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல்வேறு திட்டங்களை  சிறைத்துறை அமல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனபடுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அதனை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மத்திய சிறையிலும் சிறைவாசிகளை சந்திக்க வருபவர்கள் இன்டர்காமில் உரையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி இந்த வசதியை தொடங்கி வைத்த நிலையில் பார்வையாளர்கள் சிறைவாசிகளுடன் உரையாடினர்.

Tags : Madurai Central Jail , Intercom facility for inmates to talk with visitors: Launched at Madurai Central Jail
× RELATED மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்