உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மேலநீலிதநல்லூரில் நலத்திட்ட உதவி-ராஜா எம்எல்ஏ வழங்கினார்

சங்கரன்கோவில் : தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் வக்கீல் பெரியதுரை தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்று பெரிய கோவிலாங்குளத்தில் கட்சி கொடியேற்றி நலிவுற்ற 50 மகளிருக்கு சேலைகளும் விவசாயிகளுக்கு 100 தென்னங்கன்றுகளும், குருக்கள்பட்டியில் தூய்மை பணியாளர்கள் 21 மகளிருக்கு சேலைகளும், விவசாயிகளுக்கு 100 தென்னை கன்றுகளும் வழங்கினார்.

கீழநீலிதநல்லூர், மலையான்குளம்  மேலநீலிதநல்லூர், கருத்தானூர், ஆகிய ஊர்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேருந்தில் சென்ற பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதிகள் சண்முகபாண்டியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட சூழல் அணி அழகுதுரை, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் செல்வி சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, வக்கீல் அய்யாத்துரை, தனசேகரன், இளைஞர் அணி குமாஸ்தா முருகன், கிளை செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், கணபதிசாமி, வரதராஜன், வேலுச்சாமி, ராமதுரை, அய்யாதுரை, சந்திரன், சாமிநாதன், பழனிவேல் முருகன், முருகேசன், பெரியசாமி, பெரியதுரை, மனோகரன், குருராமர், ராமத்துரை, சாலமன், பாண்டியராஜன், அய்யாத்துரை, செளந்தராஜன், பொன்னுசாமி, ஆத்மா, சேர்மன், கணேசன், வெள்ளத்துரை, முருகன் முத்துபாண்டியன் ,துரை, பால்துரை, கீழநீலிதநல்லூர் நாகராஜன், சுந்தரராஜன், ராஜா, குமார், கடற்கரை, மைனர்சாமி, தங்கதுரை, சிவா, குமார் மலையான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், கண்ணன், கருத்தபாண்டியன், கணேசன், சமுத்திரம், பெரியசாமி, மருதுபாண்டியன், குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், மருதன்கிணறு கந்தசாமி, மோகன், மரியலூயிஸ்பாண்டியன், ராஜ் என்ற கருப்பசாமி, பாபு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: