அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்'திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நடமாடும் ஆய்வக வாகனங்கள் தொடக்கம்:

திருச்சியில் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம் முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடமாடும் ஆய்வக தன்னார்வலர்கள் 20 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர்.

வானவில் மன்றம் திட்டம் தொடக்கம்:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் வானவில் மன்றம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். வானவில் மன்றம் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 13,200 அரசு பள்ளிகளில் பயிலும் 20,000 மாணவர்கள், வானவில் மன்றம் திட்டத்தால் பயனடைவார்கள். அறிவியல் உபகரணங்கள் வாங்க பள்ளிகளுக்கு தலா ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

வானவில் மன்ற வகுப்பை முதல்வர் பார்வையிட்டார்:

திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் நடந்த வானவில் மன்ற வகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அரசுப்பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். 

Related Stories: