அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்தது: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயகுமார் பேட்டி

சென்னை: அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்த கதை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் வரும் 5ம் தேதி வருகிறது.  இதனால் அதிமுக சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வரும் 5ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்த கதை. அதை பற்றி பேச ஒன்றும் இல்ைல. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: