சிறுபான்மை மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகை தொடர வேண்டும்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை படித்து வந்த லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த உதவித் தொகை 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிறுபான்மை  மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

Related Stories: