கூட்டுறவு சங்கத்தில் ரூ.79 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேசின்ன குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ஜெகநாதன் (52). இவரும், நிர்வாக குழு உறுப்பினர்களும் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்தது. இது குறித்து துணைப்பதிவாளர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், வங்கியில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்திருந்த தங்க நாணயங்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் கடன் வாங்கியதும், விவசாயிகள் திரும்ப செலுத்திய கடன் தொகையை வங்கி கணக்கில் சேர்க்காததும், விதிமுறை மீறி வங்கி ஊழியர்களுக்கு கல்விக்கடன் என ரூ. 79 லட்சம் மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தலைவர், செயலாளர் மற்று நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 பேர் இதில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் செயலாளர் ஜெகநாதனை கைது செய்தனர்.

Related Stories: