கனடாவில் இந்திய மாணவர் பலி

டொரண்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் டிரக்கில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்பவர் கனடாவில் டொரண்டோவில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை டொரண்டோவில் உள்ள புனித கிளேர் அவென்யூவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது டிரக்கில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் அவர் பரிதாபமாக பலியானார். கார்த்திக் சைனியின் உடலை இறுதி சடங்கிற்கு அரியானாவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

Related Stories: