மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு பாதையை  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். மெரினா கடற்கரையில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 390 மீ. நீளத்துக்கு மரப்பலகையால் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மணல் பரப்பில் எளிதில் பயணித்து கடல் அலைகளை ரசிக்கும் வகையில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு பாதை ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை இந்த 390மீ நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்டது. மாற்றுத்திறனாளிகள்,  முதியோர் ஆகியோர் மணல் பரப்பில் சிரமமின்றி பயணித்து கடல் அலைகளை ரசிக்கும் வகையில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணித்து அலைகளை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த நிரந்தர சிறப்பு பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: