உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பள்ளிகளில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், எண்ணும் எழுத்தும்”, “இல்லம் தேடி கல்வி மற்றும் நான் முதல்வன்” போன்ற சிறப்புமிக்க திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன், உள்ளடக்கிய கல்வியையும் வழங்கி வருகிறது.

அதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம்” சிறப்பாக கொண்டாடப்படும் வகையில், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் சென்னை மாவட்டம், இராயபுரம் மண்டலத்தில் உள்ள அர்த்தூண் ரோடு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் (CUGPS Arathoon Road), 29.11.2022 அன்று காலை 10.00 மணியளவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: