தனது காதலை ஏற்காததால் விரக்தி; இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: ேதாழிக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமான பதிவு

சென்னை: தனது காதலை ஏற்காததால் விரக்தியடைந்த இளம் பெண் ஒருவர், தனது தோழிக்கு வாட்ஸ் அப் மூலம் உருக்கமான பதிவை அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மயிலாப்பூர் பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரியா(21). இவர் தனது சகோதரி துர்காவுடன் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள காற்கறி விற்பனை நிலையத்தில் வேலை ெசய்து வந்தனர். விஷ்ணு பிரியா கடையில் பில்லிங் வேலை செய்து வந்தார். சகோதரிகள் இருவரும் மயிலாப்பூர் மசூதி தெருவில் தங்கி பணியாற்றி வந்தனர்.

இதற்கிடையே சகோதரி துர்காவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் தனது கணவருடன் தற்போது சீனிவாசபுரத்தில் வசித்து வருகிறார். விஷ்ணு பிரியா மட்டும் மயிலாப்பூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு ெசன்றார். அதன் பிறகு அவரது  செல்போனுக்கு சகோதரி மற்றும் பெற்றோர் போன் செய்துள்ளனர். ஆனால் விஷ்ணு பிரியா போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரி துர்கா வீட்டிற்கு சென்று பார்த்த போது, தங்கை விஷ்ணு பிரியா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனே சம்பவம் குறித்து சகோதரி துர்கா மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார் விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இறந்த விஷ்ணுபிரியாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, ‘விஷ்ணு பிரியா தன்னுடன் பணியாற்றும் தோழி ரேவதி என்பவருக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தது தெரியவந்தது.

அதில், நான் நம்ம கடையில் பணியாற்றும் மணி என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். ஆனால் அவர் என்னை காதலிக்க வில்ைல. இதனால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை. நீ இந்த தகவலை பார்க்கும் போது, நான் உயிரோடு இருக்க மாட்டேன்’ என இருந்தது. அதைதொடர்ந்து போலீசார் விஷ்ணு பிரியாவின் தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: