சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கு; நடிகை ஜாக்குலினின் வாக்குமூலம் பதிவு: டிச. 12ம் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் ெதாடர்புடைய பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 15ம் தேதி ஜாமீன் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடிகை   ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஜாக்குலின், தன் மீதான வழக்கு தொடர்பாக சில தகவல்களை காவல்துறையிடம் தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.

அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தற்போது நீதிமன்ற ஜாமினில் உள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 12ம் தேதிக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது’ என்றனர்.

Related Stories: