தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது; அமைச்சர் நாசர்

சென்னை: தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை என்று பால்வள துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

அகில இந்திய அளவில் தமிழகத்திலேயே பால் விலை குறைவு. அதுவும் ஆவின் பாலின் விலை மிக குறைவு. இதுவே, தனியார் பாலாக இருந்தாலும் அல்லது பிற மாநிலங்களில் உள்ள, குறிப்பிடும்படியாக குஜராத்தின் பிரசித்தி பெற்ற அமுல் போன்ற பிற பால் நிறுவனங்களின் பாலின் விலையை பற்றி பா.ஜ.க.வினர் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

அவற்றின் விலையை விட ஆவின் பால் விலை தமிழகத்தில் குறைவு என கூறியுள்ளார். ஆவினில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

Related Stories: