தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27.11.2022 முதல் 01.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீரனுர் (புதுக்கோட்டை) 6 செண்டி மீட்டர் மழையும், வீரபாண்டி  4 செண்டி மீட்டர் மழையும், பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி தலா 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.  மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் வழங்கப்படவில்லை.

Related Stories: